உன்னதமான தேவனுடைய நாமத்தில் வாழ்த்துக்கள்.
சுமார் மூவாயிரம் ஆண்டிற்கு முன்னரே, நீதியான அரசர் என்று பெயர்பெற்ற சாலொமோன் ராஜா காலத்தில்;
பூமியிலே நடக்கும் நீதிமன்றங்களில் அநீதி இருப்பதையும், நியாயஸ்தலத்தில் அநியாயம் இருப்பதையும் தெரிவிக்கிறார் (பிரசங்கி 3:16)
குற்றவாளி என்று அறிந்தும் ஒரு வழக்குறைஞர் தன் வாதத் திறனால், தான் பெறும் பணத்திற்காக சட்டத்தையும் சூழ்நிலையையும் தனக்குச் சாதகமாக்கி தண்டனையிலிருந்து விடுதலைபெற செய்யும் திறன் உள்ளவர்கள், ”அதே” அனுபவத்தில் வளர்ந்து, உயர்ந்து, பதவி உயர்வு கிடைத்து, நீதிபதியாக நியமிக்கப்பட்டால், நியாயமும் நீதியும் தளைத்தோங்கும் என்று உலகம் நம்புகிறது !!
வாதத்திறமையும், புத்தி கூர்மையும் பூமியில் ஏற்றுக்கொள்ளப்படலாம்.
ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடி ஒரு கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்கினதை உலகமே அறியும்படி பிரசுரிக்கபட்டாலும், இவ்வுலகில் அதற்கு சாட்சியில்லை என்று வாதாடி ஜெயிக்கவும் முடியும்.
ஆனால், பரலோக நீதிமன்றத்தில் விளக்கமோ, காரணமோ, சாட்சியோ, விவாதமோ நமக்கு வாய்ப்புகளே கொடுக்கப்படாது. அன்று *நியாயத்தீர்ப்பு* அறிவிக்கப்படும் !! 1பேதுரு 4:5, சங். 9:7-8
ஆகவே, நீதிக்கு ஏற்றபடி உத்தமாய் நம்மை மாற்றியமைத்து நடப்பதற்கான வாய்ப்புகள் - சுவாசம் இருக்கும் பொழுது தான் உள்ளது. பிலி. 2:15-16
லஞ்சமோ, வாக்குஜாலமோ, சமாளிப்போ, அழுகையோ, நடனமோ, இசைத்தாலந்துகளோ எதுவும் அப்போது எடுபடாது !!
ஆகவே நமது கையிலேயே எப்போதுமுள்ள,
நன்கு புரியும்படியாக சொந்த மொழியில் அச்சிடப்பட்ட,
பரலோக நீதிமன்றத்தின் சட்டப்புத்தகமான வேதாகமத்தில் உள்ள நடைமுறை சட்டத்தின்படி (புதிய ஏற்பாட்டு சத்தியத்தின்படி) நம் தொழுகை முறையையும், ஞானஸ்நானம் எதற்காக எடுத்துக்கொண்டீர்கள் (அப் 22:16) என்பதையும், வாழ்க்கை முறையையும் ஒப்பிட்டு பார்ப்பது நமக்கு கொடுக்கப்பட்ட பொற்கால அவகாசம் !! 1தெச. 5:23,
நமக்கான உன்னத தீர்ப்பு வாசிக்கப்படும் போது, நிச்சயம் அவை நமக்கு சாதகமாகவே வரும் !! ரோ. 2:2, 1கொரி. 11:31
வேதத்தை ஒப்பிட்டு புதிய ஏற்பாட்டு சத்தியத்தின்படி நேர்த்தியாய் வாழ்ந்தால் நாம் தைரியங்கொண்டு திடமனதாய் நாட்களை எதிர்கொள்ள முடியும். 1யோ. 3:21-22
*ஆமென். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக...*
No comments:
Post a Comment