Announcement: Pray for 🇹🇷Turkey 🔹 Follow us in social media and get daily verse 🔹 We are officially now in sharechat. Get your daily bread by follow us. 🔹 இன்றைய சிந்தனை வெளியிடப்பட்டுள்ளது

Tuesday, March 21, 2023

தேடிவரும் வெற்றி

நம்மீது இரக்கமும் கிருபையும் உள்ள தேவனுக்கே எல்லா மகிமையும் கனமும் உண்டாவதாக.



பணக்காரனோ, ஏழையோ, உழைப்பாளனோ, சோம்பேறியோ, பெரியவனோ, சிரியவனோ எல்லோருக்கும் கஷ்டமும், துன்பமும், மகிழ்ச்சியும், வியாதியும், வேதனையும், சுகமும், துக்கமும், நிச்சயம் உண்டு. பிர. 2:14, 9:1-2, சங். 49:10 விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், எல்லாவற்றையும் கடந்து போகத்தான் வேண்டும். பிர. 2:15-16, 

எப்படி அல்லது எப்போது மீண்டு வருவது என்பது அவரவர் பெற்றுக்கொள்ளும் கிருபையை பொருத்தது. சங். 119:153, புல. 5:1, யாத். 3:7-8, சங். 9:13-14

உலகத்தின் அனைத்து நதிகளும் கடலில் போய் ஒன்று சேர்ந்தாலும் ஒரு நாளும் கடல் தன்னிறைவு அடையாதது போல (பிர. 1:7) மனிதன் நிச்சயம் தன் வாழ்நாளை கடந்து செல்லவேண்டும். கண்ணாடி குப்பியில் தன்னை அடைத்து வைத்துக்கொண்டாலும் காலத்தை பிடித்துக்கொள்ள அவனால் இயலாது !

கவலைகளும் நெருக்கங்களும் நம்மை எவ்வளவு சூழ்ந்தாலும், அவைகள் நம்மை மேற்கொள்ளாதவாறு நாம் தேவனுடைய வார்த்தையில் நிலைத்து நிற்போம். சங். 25:2, எரே. 1:19, 1:8

“உன்னை இந்த ஜனத்துக்கு எதிரே அரணான வெண்கல அலங்கமாக்குவேன்; அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும், நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். நான் உன்னைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவித்து, உன்னைப் பலவந்தரின் கைக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன் என்கிறார்.” எரே. 15:20-21


தேவனுடன் ஒன்றியிருந்தால், விடுதலையும், வெற்றியும் நிச்சயம் நம்மை தேடி வரும். 


*ஆமென். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக...*

No comments:

Post a Comment