நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவனுடைய நாமத்திற்கே மகிமையும் கனமும் உண்டாவதாக
1-வாயின் வார்த்தையால் இறந்தவரின் உயிர் வந்தது.
2-அதட்டலினால் காற்றும் கடலும் கீழ்படிந்தது,
3-தொட்டதும் சுகம் கிடைத்தது,
4-சாப்பாடும் திராட்சை ரசமும் (உழைக்காமலே) வார்த்தையினாலும் ஜெபத்தினாலும் அபிவிருத்தி ஆனது.
இப்படி இன்னும் அடுக்கிக்கொண்டே போக முடியும்.
வேதத்தை சரியான முறையில் அறியாமலேயே அதை கக்கத்தில் வைத்துக்கொண்டு தன்னைச்சுற்றியுள்ளோரை தன் வசப்படுத்தி சமாளித்துக்கொண்டிருப்பவர்கள் இதில் ஏதாவது ஒரு சக்தி அவர்கள் கைவசம் உண்மையிலேயே இருந்தால் அவர்களது காலுக்கும் தரைக்கும் குறைந்தபட்சம் இரண்டு இஞ்ச்சாவது இடைவெளியை காண்பிப்பார்கள் !! (1கொரி. 8:2)
சகல வல்லமையும் தன்னில் இருந்தும், இயேசுவோ அதை எந்த இடத்திலோ, சூழ்நிலையிலோ தன்னை குறித்து மேன்மையாக சொல்லிக் கொள்ளவேயில்லை. அப்படி சொன்னவர்களையும் வேண்டாம் என்றார். (பிலி. 2:6-8, லூக். 4:41)
தற்போது நம் வசம் இருப்பது எதுவுமே நமக்குச் சொந்தமானது அல்ல... கடனாக பெற்றுக்கொண்டது தான் என்பதை நினைவில் வைத்து… எப்போதும் தாழ்மையாய் இருக்க மறந்துவிடக்கூடாது. 1கொரி. 4:7
பாராட்டுக்கள் மாத்திரம் அல்ல, வெறுப்புகளும், அவமானங்களும் வரும்போதும்; பல வேளைகளில் “நான் யார் என்று உனக்குத் தெரியுமா?” என்பதை *மற்றவருக்குக் காண்பிக்கவும் அதை நிரூபிக்க தோன்றும்*. 1பேதுரு 2:23
இயேசு கிறிஸ்துவோ சிலுவையின் மரண தருவாயில் கூட தன்னைத் தாழ்த்தி நமக்கு அந்தப் பாடத்தைக் கற்று கொடுத்து இருக்கிறார்...
நீ....டி....ய... பொறுமை அவசியம்…
சோதனைகளும், நெருக்கங்களும் நம்மை மேற்கொள்ள அனுமதிக்காதீர்கள். நாம் அழைக்கப்பட்ட அழைப்பு பெரியது. அதனை அடைய பொறுமை மிக அவசியம்.
Praise the Lord
-Jesuswithustn
No comments:
Post a Comment