பிதாவாகிய தேவன் தாமே நமக்கு சந்தோஷத்தையும் சமாதானத்தையும் தருவாராக.
டேய் ஆபிரகாம் என்றோ,
பெயரைச் சொல்லி கூப்பிட்டோ அல்லாமல்,
சாராள் தன் *கணவன் ஆபிரகாமை “ஆண்டவர்*” என்று அழைத்து கீழ்படிந்து இருந்தார். (1 பேதுரு 3:6)
சமுதாயத்தில், தன் புருஷனுக்கு மேன்மையை கொடுக்கும் கிரீடமாக மனைவி இருக்கிறார் (நீதி. 12:4)
இதை மறந்து, எந்நேரமும் மனைவியானவள்;
புருஷனை நச்சரித்துக்கொண்டே, முணுமுணுத்துக் கொண்டே, உங்களுக்கு என்ன தெரியும் சும்மா இருங்கள் என்றால்; கணவனுக்கு கிரீடமாக அல்ல அவன் தலைக்கு பாரமாக தோன்றும்.
எதற்கெடுத்தாலும் நொச்சு நொச்சுனு இருந்தால், வீட்டின் நடுவிலிருந்து கணவன் ஆளுமை செய்யாமல் தன் வேலை உண்டு தான் உண்டு என்று அவன் போக்கில் இருந்து விடுவான் (நீதி. 25:24).
மனைவியானவள் தன் வீட்டை கட்ட வேண்டும் (நீதி. 14:1) அப்போது அவள் தன் வீட்டுக்கு *அலாரமாக இல்லாமல் அலங்காரமாய் இருப்பாள்*. (நீதி. 31:10)
தன் சொந்த புருஷனுக்கு மனைவி அடங்கியிருக்க வேண்டும் (எபே. 5:22).
*அப்பொழுது அந்த வீடு சந்தோஷத்திலும் சமாதானத்திலும் திளைத்திருக்கும்*.
Praise the Lord 🙏
-Jesuswithustn
No comments:
Post a Comment