நேர்த்தியாய் நடக்கும்படி நம்மை வழிநடத்தும் பரிசுத்த தேவனின் நாமத்திற்கு துதியும் கனமும் உண்டாவதாக.
கற்பனை வளமும், ஜோடிக்கும் திறமையும்;
நேர்த்தியானதை சாமர்த்தியமாக மாற்றும் திறனும்;
ஆதி முதலே மனிதர்கள் கற்றுக்கொண்ட கலை.
அந்த சாமர்த்தியத்தை தேவனுடைய வார்த்தைக்கு பயன்படுத்தினால் தீங்கு தான் மிஞ்சும்.
”நீர் எனக்கு தந்த ஸ்திரீ தான் என்னை தடம் மாற்றினாள்” என்றார் ஆதாம். ஆதி. 3:12
”நான் அல்ல சர்ப்பம் தான் என்னை சாப்பிட சொன்னது” என்றார் ஏவாள். ஆதி. 3:13
தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ”தேவனையே காரணம் காட்ட துவங்கின” நாள் முதல் இந்நாள் வரைக்கும் அந்த பழக்கம் இருக்கிறது.
தேவ வார்த்தைக்கு அப்படியே கீழ்படிந்து தன் தவறை சரிசெய்வதை விட்டு; தனது கொள்கையிலும், கீழ்படியாமையிலும் நிலைத்து நிற்க ஒரு காரணத்தை தேடி மற்றவர் மீது பழி போடுவதும், திணிப்பதும், திறித்து சொல்வதும், போதிப்பதும், எழுதுவதும், பேசுவதும் தீமையிலேயே முடியும் !!
நம்முடைய தவறை நாம் உணர்ந்து ஏற்றுக்கொண்டு நம்மை மாற்றிக்கொள்ளும் போது, ஆண்டவர் நமக்கு துணை நின்று நம்மை ஆசீர்வதிக்கிறார்.
தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர். அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்வார், நீ பொய்யனாவாய். நீதி. 30:5-6
நான் ஆதாமைப்போல என் மீறுதல்களை மூடி, என் அக்கிரமத்தை என் மடியிலே ஒளித்துவைத்தேனோ? யோபு 31:33
எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள். ரோ. 10:3
தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான். நீதி. 28:13
தவறை உணர்ந்து சாந்தமாக சமாதானமாக தேவ அன்பைப் பெற இன்றும் நம் கதவு தட்டப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. 1யோ. 1:8-10
Praise the Lord 🙏
-Jesuswithustn
No comments:
Post a Comment