Announcement: Pray for 🇹🇷Turkey 🔹 Follow us in social media and get daily verse 🔹 We are officially now in sharechat. Get your daily bread by follow us. 🔹 இன்றைய சிந்தனை வெளியிடப்பட்டுள்ளது

Sunday, October 30, 2022

குடும்பத்தில் தேவனின் எதிர்பார்பு

சமாதான காரணராகிய இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். இருவரும் ஒரு சரீரம் என்றும்,  இருவரும் ஒன்றாய் இருக்கிறார்கள் என்றும், கணவன் மனைவியைக் குறித்து வேதம் சொல்கிறது. ஆதி. 2:24, மாற்கு 10:8










ஆனால், எண்ணத்திலோ, அல்லது ஒரு காரியத்திலோ, 
கணவன் - ”ஆம்” என்றால், மனைவி - ”இல்லை” என்று சொல்லும் எதிர்மறை எண்ணமே அநேக வீட்டாளின் நிலைபாடு. இருவரின் கருத்துக்களும் வெவ்வேறாய் இருக்கிறது. 
அமெரிக்கா ஜனாதிபதியும், ரஷியா அதிபரும்,இந்திய பிரதமரும், அண்டை நாடுகளும் சமாதானமாக வாழவேண்டும் என்று தினமும் ஜெபம் பண்ணுகிறவர்கள் சொந்த குடும்பம் சமாதானமாகவும் சந்தோஷமாகவும் வாழவேண்டும் என்று தங்கள் செயல்பாடுகளை சிந்தித்து அதற்கேற்ப சமாதான காரியங்களில் முற்படுவதில்லை !!  
அருகாமையிலிருக்கும் கணவனையோ மணைவியையோ உதாசீனபடுத்தினால் குடும்பத்தில் சமாதானம் எங்கிருந்து வரும்?
கணவன் தன் மனைவியை கனம் பண்ணாமலும், 
அன்பு செலுத்தாமலும், மனைவி தன் கணவனை மதிக்காமலும், நேசிக்காமலும் இருந்தால் மணிக்கணக்காக நேர் முழங்காலில் நின்று ஏறெடுத்தாலும் எந்த ஜெபமும் வீண். யாக். 4:2-3
குழந்தைக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்று எலிசபெத்துவிடம், ஜனங்கள் கேட்கும் போது, ”யோவான்” என்றதை சகரியாவும் ஆமோதிக்கிறார். லூக். 1:60 !!கணவன் சொன்னதை மனைவியும், மனைவி சொன்னதை கணவனும் இப்படி கருத்தில் ஒற்றுமையாய் இருந்தார்கள்.

ஒரே வீட்டில் வசிப்பதால் அன்பான ”குடும்பம்” என்று ஊரை மயக்கி முழு பூசணிக்காயையும் மறைத்துவிடலாம். ஆனால் மறைத்தவர்களுக்கே ஏமாற்றம் மிஞ்சும் !! சகல வேறுபாடுகளையும் களைந்து விட்டுக்கொடுத்து தாழ்ந்து இறங்கி சகித்து பொறுத்து கணவனும் மனைவியும் அன்போடும் நேசதோடும் ஒரே இருதயமாய் இருக்க வேண்டும் என்பதே தேவனுடைய திட்டம். 

அவருடைய வார்த்தைக்கு கீழ்படியும் போது அப்படியாக அன்பில் கட்டப்பட்ட குடும்பம் ஆசீர்வாதம் பெறுகிறது. சங். 128:3, 6, 1சாமு. 1:5, 20; 2:20-21

ஆமென். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக...

No comments:

Post a Comment