Announcement: Pray for 🇹🇷Turkey 🔹 Follow us in social media and get daily verse 🔹 We are officially now in sharechat. Get your daily bread by follow us. 🔹 இன்றைய சிந்தனை வெளியிடப்பட்டுள்ளது

Sunday, November 6, 2022

பச்சைச்குத்திக்கொள்ளுதல் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?

 பச்சைக்குத்திக்கொள்ளுதல் உலகத்தின் பல பாகங்களிலும் மிகவும் பிரபல்யமாயிருக்கிறது. சமீப வருடங்களில் பச்சைக்குத்திக்கொள்ளுபவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. பச்சைக்குத்திக்கொள்ளுதல் இளங்குற்றவாளிகள் அல்லது போராளிகளுக்கு உரியது மட்டுமல்ல. சரித்திரத்தில் கலகக்காரர்களாகிய போராளிகள் பச்சைக்குத்திக்கொள்ளுதல் எல்லாம் கடந்துபோயவிட்டது. 




இயேசுவுக்குள்ளாக இருக்கிற ஒரு விசுவாசி பச்சைக்குத்திக்கொள்ளலாமா கூடாதா என்று புதிய ஏற்பாடு வெளிப்படையாக குறிப்பிட்டு ஒன்றையும் கூறவில்லை. ஆகவே பச்சைக்குத்திக்கொள்ளுதல் பாவம் என்று நாம் சொல்ல முடியாது. வேதாகமம் இந்த விஷயத்தில் மௌனமாக இருப்பதால், நமக்குள்ள தெளிவான நம்பிக்கைகளின் அடிப்படையில், பச்சைக்குத்திக்கொள்ளட்டுமா அல்லது வேண்டாமா என்று முடிவெடுக்க வேண்டியதாக இருக்கும். 

பச்சைக்குத்திக்கொள்ளுதலுக்கும் பொருந்துகிற வகையில் இங்கே சில பொதுவான வேதாகம கோட்பாடுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது: 

o பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கு கீழ்படிந்து அவர்களை கனம்பண்ணுகிறவர்களாய் இருக்கவேண்டும் (எபேசியர் 6:1-2). வயதுக்கு வராத சிறார்கள் தங்கள் பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக தாங்களாகவே தங்கள் சுய விருப்பத்தின்படி பச்சைக்குத்திக்கொள்ளுதலை வேதாகமம் ஆமோதிக்கிறதில்லை. இப்படியாக எதிராக செயல்பட்டு பச்சைக்குத்திக்கொள்ளுதல் பாவமாகும். 

o “வெளியரங்கமான அலங்காரமானது”, “உள்ளான நிலையை” காட்டிலும் முக்கியமானது அல்ல, ஒரு கிறிஸ்தவனின் கவனம் அதில் இருக்கக்கூடாது (1 பேதுரு 3:3-4). பிறருடைய கவனத்தை ஈர்க்கவும், அவர்களாலே புகழப்படுவதற்கும் வீணான செயலில் ஈடுபடுவது, தங்கள் சுயத்தை வெளிப்படுத்துகிறதான பாவசெயலாகும். 

o தேவன் நம் இருதயத்தை காண்கிறவராய் இருக்கிறார், நம்முடைய செயல்நோக்கம் மற்றும் உள்நோக்கம் யாவும் தேவனை மகிமைப்படுத்துவதேயாகும் (1 கொரிந்தியர் 10:31). தங்களை வெளிக்கொணர்ந்து காண்பிப்பதற்காக பச்சைக்குத்திக்கொள்ளுதல், தேவனுக்கு மகிமையை கொண்டு வருவதில்லை. பச்சைக்குத்திக்கொள்ளுதல் தன்னில்தானே பாவமில்லாததாய் இருக்கலாம், ஆனால் அதை செய்வதன் உள்நோக்கம் தான் பாவமாக இருக்கலாம். 

o நம்முடைய சரீரங்களும் ஆத்துமாக்களும் தேவனால் மீட்கப்பட்டு அவருடையதாக அவருக்கே சொந்தமானதாக இருக்கிறது. விசுவாசியின் சரீரம் பரிசுத்த ஆவியானவர் வாழும் ஆலயமாக இருக்கிறது (1 கொரிந்தியர் 6:19-20). அந்த ஆலயத்தை எந்த அளவிற்கு மாற்றி சீரமைத்தல் சரியாக இருக்கும்? மிஞ்சி போகாதபடிக்கு ஏதாவது எல்லைக்கோடு இருக்கிறதா? ஒரு சரீரத்தின்மேல் பெருக்கம் கொண்டு போகிற பச்சைக்குத்திக்கொள்ளுதல் கலையாக இருப்பது நின்று பாவமுள்ளதாக உருச்சிதைவுக்குள்ளாகாதா? இது ஒருவருடைய தனிப்பட்ட பிரதிபலிப்பும் நேர்மையான ஜெபமுமாகும். 

o தேவனுடைய செய்தியை உலகத்திற்கு அறிவிக்கிற கிறிஸ்துவின் ஸ்தானாபதிகளாக நாம் இருக்கிறோம் (2 கொரிந்தியர் 5:20). பிறரோடு சுவிசேஷத்தை பகிர்ந்து கொள்கிற விஷயத்தில், எந்த அளவிற்கு பச்சைக்குத்திக்கொள்ளுதல் செய்தியை பகிர்ந்து கொள்வதில் உதவிபுரியும்? 

o விசுவாசத்தினால் வராதது யாவுமே பாவம் தான் (ரோமர் 14:23), ஆக பச்சைக்குத்திக்கொள்ளுகிற நபர் முழுமையான நம்பிக்கையோடு இது அவன் அல்லது அவளைக்குறித்த தேவனுடைய சித்தமாக இருக்கிறதா என நிதானித்து பார்க்க வேண்டும். 

பச்சைக்குத்திக்கொள்ளும் காரியத்தைக் குறித்த கலந்துரையாடலை பழைய ஏற்பாட்டையும் பார்க்காமல் முடிக்க முடியாது. பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணம் பச்சைக்குத்திக்கொள்ளுதலுக்கு தடை விதிக்கிறது: “செத்தவனுக்காக உங்கள் சரீரத்தைக் கீறிக்கொள்ளாமலும், அடையாளமான எழுத்துக்களை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர்” (லேவியராகமம் 19:28). பச்சைக்குத்திக்கொள்ளும் காரியத்தை தடைபண்ணுவதற்கான காரணம் இந்த வசனத்தில் கொடுக்கப்படவில்லை, அதே சமயம் பச்சைக்குத்திக்கொள்ளும் செயல் மற்ற சமூகத்தில் மலிந்து கிடந்த ஒரு செயலாகும். அது அவர்களுடைய தேவர்களோடு சம்பந்தப்பட்ட மற்றும் அவைகளுடைய சொரூபங்களாக இருந்தது. தேவன் தம்முடைய ஜனங்கள் வேறு பிரிக்கப்பட்ட நிலையில் இருக்கவேண்டும் என விரும்பினார். அதே வசனத்தில் “நான் கர்த்தர்” என்று அவர்களை நினைவுபடுத்துகிறார். இஸ்ரவேலர்கள் அவருக்கு சொந்தமானர்கள், அவரால் படைக்கப்பட்டவர்கள், ஆகையால் அவர்கள் சரீரங்களில் பொய்யான அந்நிய தேவர்களுடைய நாமங்களை வரைந்து கொள்ளக்கூடாது. புதிய ஏற்பாட்டு விசுவாசிகள் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு கீழானவர்கள் அல்ல என்கிற போதிலும், இதிலிருந்து நாம் இந்த பிரமாணத்தை எடுத்துக்கொள்ளலாம், அதாவது உலகத்தோடும் அதன் தத்துவ சிந்தைகளோடும், தேவர்களோடும் ஒத்துப்போகிறதான காரியங்களை செய்யாமல் அவைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். அடிப்படை குறிப்பு என்னவென்றால், பச்சைக்குத்திக்கொள்ளும் காரியம் பாவம் அல்ல, ஆனால் கிறிஸ்தவ சுதந்தரத்திற்குள் வேதாகம பிரமாணங்களோடு நடத்தப்படுகிறதாயும் அன்பிலே வேரூன்றியதாயும் இருக்கவேண்டும். 


Source:




Many spiritual topics covered in this website




No comments:

Post a Comment